வேலைவாய்ப்பு

நீங்க ஹாட்டான புத்தகம் படிப்பீர்களா ? இப்படி கேட்டா என்னத்த சொல்றது..!?

நம் நகைச்சுவை உணர்வு நேர்முகத் தேர்விற்கு பயன்படுமா ? அல்லது தவறாகிவிடுமா என்றால் அது நாம் உச்சரிக்கும் தன்மையினையும், அந்த பதிலை எடுத்துச் செல்லும் முறையிலுமே உள்ளது. நேர்காணல் என்றாலே ஒரு சிரமமான, கடுமையான விஷயம் என்றே பெறும்பாலும் போதிக்கப்படுகிறது. இன்று திறமையான ஆட்களைத் தேடி அலையும் கார்ப்பரேட் நிறுவனங்களில் தேர்வில் கேள்வியாளர்கள் பெரும்பாலும் நகைச்சுவையான, அதேச் சமையம் சிந்திக்க வைக்கக் கூடிய கேள்விகளை தவிர்த்துவிடுகின்றனர்.

ஆனால், அரசுப் போட்டித் தேர்வுகளில் அவ்வாறு இல்லை. அவ்வாறாக நம் மனநிலையை பரிசோதிக்கும் கேள்வி பதில்களை இங்கே பார்க்கலாம் வாங்க.

கேள்வி 1

எதை மிகச் சிரமப்பட்டு அடைந்து அதனை வீசாமல் வைத்துக் கொள்வர்?

பதில்:

இதற்கு உங்களுக்கு விருப்பமான பதில் எதுவாயினும் கூறிவிடலாம். ஆனால், கேள்வி பொதுவானது. அப்படியானால் விடையும் பொதுவானதாகத்தானே இருக்க முடியும். அப்படி அனைவரும் பிடித்து வீசாமல் இருப்பது தும்மல் என பதில் அளித்துவிடுங்கள்.

கேள்வி 2

உங்களது வீட்டில் ஒரு சுற்றுச் சுவரை 8 பணியாட்கள் சேர்ந்து 10 மணி நேரத்தில் கட்டி முடித்து விட்டனர். அப்படியானால் ஒரு பணியாள் எத்தனை மணி நேரத்தில் கட்டி முடிப்பார் ?

பதில்

இக்கேள்விக்கான பதிலை மனதில் போட்டு குழப்பி, கணக்கை பிசைந்து எல்லாம் தேட வேண்டிய அவசியம் இல்லை. அதான் ஏற்கனவே சுவர் கட்டி முடித்தாயிற்றே. பின் எதற்கு ஒரு பணியாள் தனியாக கட்ட வேண்டும் என பலார் பதிலளியுங்கள்.

கேள்வி 3

அடர்ந்த கருப்பு நிற உடையனிந்த நபர் யாரும் இல்லா சாலையில் நடந்து வருகிறார். அந்நேரத்தில் அவருக்கு எதிராக விளக்கு இல்லாத ஓர் கார் வேகமாக வருகிறது. அச்சாலையில் வேறு மின் விளங்குகளும் இல்லை. நல்ல வேலையாக நடந்துவரும் நபர் மீது இடிக்காமல் அந்தக் காரை ஓட்டுநர் நிறுத்திவிட்டார். எப்படி ?

பதில்:

இந்த கேள்வி கேட்ட அவர் இச்சம்பவம் நடந்தது பகல் நேரமா, இரவு நேரமா என குறிப்பிடவில்லை. அப்படியென்றால் அது பகல் நேரம் தான். பகல் நேர வெளிச்சத்தில் சரியாக ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டார்.

கேள்வி 4

ஒரு வணிகரின் வீட்டில் மூன்று அறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றில் பணம் நிறைந்துள்ளது. இரண்டாவது அறையில் நகைகள் நிறைந்துள்ளன. மூன்றாவது அறையில் முக்கிய பத்திரங்கள் உள்ளன. இவை அனைத்திலும் திடீரென ஒரு நாள் தீப்பற்றி எரியத் தொடங்கிவிட்டது. போலிஸ்காரர் முதலில் எந்த அறையில் உள்ள தீயினை அனைக்க முயற்சிப்பார் ?

பதில்:

பணமா ? நகையா ? முக்கியப் பத்திரமா ? என சிந்திக்காமல் கேள்வியை உற்றுநோக்கினாலே போதும். தீயனைப்பு வீரர் தானே தீயினை அனைக்க வருவார்.

கேள்வி 5

ஐந்து மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழேக் குதித்தால் எந்த பில்டிங்கில் நீங்கள் இருப்பீர்கள் ?

விடை:

இது சற்று நகைச்சுவையான கேள்விதான். நகைச்சுவையாகவே பதில் அளிக்கலாம் மருத்துவமனை என்று.

கேள்வி 6

ஒருவர் உங்களை நோக்கி துப்பாக்கியை நீட்டினால் என்ன செய்வீர்கள் ?

பதில்:

அந்த துப்பாக்கியை பார்ப்பேன். பிடித்திருந்தால் வாங்குவேன். இல்லையென்றால் எனக்கு வேண்டாம் என கூறிவிடுவேன்.

கேள்வி 7

ஒரு கடைக்கு கஷ்டமர் வருகிறார். அவர் தனக்கு தேவையான பொருட்களை 800 ரூபாய் மதிப்பிற்கு வாங்கிவிட்டு ஆயிரம் ரூபாயினைத் தருகிறார். கடைக்காரரிடம் மீதித்தொகை இல்லாததால் பக்கத்து கடைக்காரரிடம் இருந்து சில்லரை வாங்கி மீதி 200 ரூபாயைக் கொடுத்துவிடுகிறார். சிறிது நேரம் கழித்து பக்கத்துக் கடைக்காரர் முதல் கடைக்காரரிடம் வந்து நீங்கள் கொடுத்தது கள்ள நோட்டு என்று கூறி அவரிடம் 1000 ரூபாயினைப் பெற்றுச் செல்கிறார். இப்போது முதல் கடைக்காரருக்கு எவ்வளவு நஷ்டம் ?

பதில் :

இக்கேள்விக்கு பெரும்பாலும் அளிக்கக்கூடிய பதில் ரூ.1800, ரூ.2000, ரூ.1200 மற்றும் ரூ.1000 என. இவற்றில் சரியான பதில் ரூ.2000 ஆகும்.

விளக்கம் :

பொட்கள் மற்றும் மீதித் தொகை என ரூ.1000, பக்கத்துக் கடைக்காரருக்கு ரூ.1000. மொத்தம் ரூ.2000.

கேள்வி 8

ஒரு ஓட்டப் பந்தையத்தில் இரண்டாவதாக செல்லும் நபரை பின்னுக்குத் தள்ளி முன்னேறிச் செல்கிறீர்கள் எனில் தற்போது உங்களுடைய நிலை என்ன ?

விடை:

இக்கேள்வியை சரியாக புரிந்துகொள்ளாமல் அனைவரும் சொல்லக் கூடிய தவறான பதில் முதல் இடம். இரண்டாவதாக செல்லும் நபரை கடந்து சென்றால் அந்த இரண்டாவது இடத்தில் தானே நீங்கள் பயணித்துக் கொண்டிருப்பீர்கள்.

கேள்வி 9

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் ஒருவரை இந்தியாவில் புதைக்க முடியுமா ?

விடை:

கேள்வியை நன்றாக உள்வாங்கிக் கொள்ளுங்கள். இதில் அமெரிக்கக் குடிமகனோ, இந்தியக் குடிமகனோ, அமெரிக்காவில் குடியேறியவர் என எந்தக் குழப்பமும் இல்லை. கேள்வியில் அமெரிக்காவில் வாழ்ந்துவருபவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் உயிருடன் இருப்பவரை எதற்காக இந்தியாவில் புதைக்க வேண்டும் ?.

கேள்வி 10

நீங்கள் ஆபாசமான புத்தகம் படிப்பீர்களா ?

கொஞ்சமும் கூச்சமின்றி பதில் அளித்துவிடுங்கள். ஏனென்றால் இதுபோன்ற கேள்விகள் நம் மனநிலையை பரிசோதிக்கவே கேட்கப்படுகின்றன. தவிர்க்க முடியாத சூழலில், அதைப் படித்திருக்கிறேன் என்று பதில் அளிக்கலாம். இல்லை என்றால், அது போன்ற புத்தகங்களை இதுவரை படித்தது இல்லை என்று கூறிவிடலாம். இது ஒரு தேவையில்லாத கேள்வியாக இருந்தாலும் கூட அந்த இடத்தில் கோபப்படுவதையோ, பதட்டப்படுவதையோ தவிர்த்து விடுங்கள்.

மேலும் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka Job Facebook :- Liked

Srilanka Job Facebook Group :- Joined

Srilanka Job Viber Group :- Joined

Srilanka Job Whatsapp Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இன்டர்வியூல இத மட்டும் செஞ்சிங்கன்னா உங்களுக்கு வேலை நிச்சயம்!

அம்மு

இலங்கை மகாவலி அதிகார சபையில் பதவி வெற்றிடம்

அம்மு

ரூ.1000 தொடங்கி பல லட்சம் கோடி சொத்து.! நீங்களும் ஜெயிக்கலாம்.!

அம்மு