வேலைவாய்ப்பு

இந்த 10 போதும்..! எச்.ஆர் உங்க வலையில விழுந்துடுவாங்க..!!

நேர்முகத் தேர்வில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விசயம் தெரியாததாலேயே பெரும்பாலான நேரங்களில் கிடைக்க வாய்ப்பிருந்த வேலையும் பறிபோய் விடுகிறது. ஒரு நேர்முகத் தேர்வை எவ்வாறு வெற்றிகரமாக மாற்றுவது என்ற வழிமுறை தெரிந்திருந்தால் போதும் வேறு யாராலும் உங்களுக்கான பணியைத் தடுக்க முடியாது.

உங்களுக்கான தைரியத்துடன் இந்த வழிமுறைகளையும் பின்பற்றி பாருங்க. இன்டர்வியூல கேள்வி கேட்குற எச்ஆர் இனி உங்க வசமாகத்தான் இருப்பாங்க.

வாய உட்ராதீங்க..!

இது பெரும்பாலும் எல்லாரும் செய்யக்கூடிய ஒன்றுதான், எல்லாம் தெரிந்தது போல பேசுவது. இதற்கு முன்னாள் நான் அவர்களுடன் பணியாற்றினேன், மிகப் பெரிய வல்லுநர்களைத் தெரியும் என்று நேர்முகத் தேர்வில் கூற வேண்டும் என அவசியம் இல்லை. ஏனென்றால் உங்களை கேள்வி கேட்பவருக்கும் இது தெரியும். மேலும், யாரையும் குறைகூறியும் பேசிவிட வேண்டாம்.

பாடி லேங்குவேஜ்

தேர்வு அறைக்குள் செல்லும் போது நடிகர் அறிமுகம் போல நடப்பது, கவுண்டமணி போல வாயில் ரொமாண்டிக் லுக்கு விடுவது போன்ற விசயங்களை தவிர்க்க வேண்டும். நீங்க என்னதான் கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதில் அளித்திருந்தாலும் இந்த செயல்கள் உங்க மதிப்பெண்ணைக் குறைத்துவிடும்.

புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு

புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்குமோ, இல்லையோ. ஆனா வேலைக்கு கேடு விளைவித்துவிடும். சிகரெட் பிடித்ததால் ஏற்படும் ஒருவித வாசனையை மோப்பம் பிடிப்பதற்காகவே எச்ஆர் மூக்கு காத்திருக்கும். வாசம் சிக்குச்சு வேலை போச்சு.

குணமா வாயில சொல்லணும்…

கேள்வி நேரத்தில் இது கண்டிப்பாக நடக்கும். பிறரை விட குரலை உயர்த்தி பேசினால் எளிதில் அவர்களது கவனத்தை ஈர்த்துவிடலாம் என்னும் தவறான எண்ணத்தில் காட்டுக்கத்து கத்தாதீங்க. எந்த விசயமா இருந்தாலும் குணமா மெதுவா சொல்லணும்.

கதையளக்காதீங்க..

கேள்வி கேட்கும் எச்ஆர் ஒன்றும் தயாரிப்பாளர் இல்லை, நீங்களும் கதை ஆசிரியர் இல்லை. உங்க சொந்தக் கதையெல்லாம் பேசிட்டு இருப்பதற்கு. தேவையில்லாத கதைகளை பேசுவதை கைவிட்டு வேலை தொடர்பாக பேசுங்கள்.

டார்ச்சர் பண்ணாதீங்க…

இதுவும் கண்டிப்பாக எல்லாரும் பண்ற ஒன்றுதான். நேர்முகத் தேர்வை முடித்துவிட்டு வந்த அடுத்த நாளில் இருந்தே எச்ஆரைத் தொடர்புகொண்டு எப்ப வேலை கிடைக்கும், எப்ப வேலை கிடைக்கும் என தொந்தரவு பண்றது. இதுல சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று தேர்வு நேரத்திலேயே இந்த கேள்வியக் கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. இனி அப்படி பண்ணாதீங்க.

அதையும் சேத்தி சொல்லுங்க..

நேர்முகத் தேர்வின் போது கண்டிப்பாக உங்களைப் பற்றி கூறுங்கள் என சொல்லுவாங்க, உடனே நீங்க செய்த சாதனைகளை பட்டியலிட்டு சொல்லும் போது கூடவே உங்க தோல்விகளையும் சொல்லுங்க. உங்களின் உண்மைத் தன்மை அதில் தான் வெளிப்படும்.

அனுபவத்த சொல்லுங்க…

தேர்வின் போது சுயவிபரக் கடிதத்தில் (ரெஸ்யூம்) இருப்பதையே மீண்டும் கூறி போர் அடிக்காமல் இதற்கு முன் பணியின் போது பெற்ற அனுபவம், அதில் கற்றது என்ன என்பதை கூறுங்கள்.

பாராட்டுங்க..!

பாராட்டு என்றால் உங்களை கேள்வி கேட்போரை புகழ வேண்டும் என்றில்லை. உங்கள கேள்வி கேட்பவரும் ஓர் சக மனிதரே. அவரிடம் எந்த பயமும் இன்றி சகஜமாக பேசுங்கள். உதாரணத்திற்கு இந்நிறுவன எச்ஆர் மூலம் இதர பணியாட்களுக்கு சிறந்த சேவை கிடைக்கிறது. இந்நிறுவனம் பெற்றுள்ள சாதனை போன்றவற்றை மட்டும் அளவாகக் கூறுங்கள். அதை விட்டுவிட்டு எச்ஆரின் ஆடை நன்றாக உள்ளது, சிரிப்பு நன்றாக உள்ளது என ஓவராகச் செய்து அடி வாங்காதீர்கள்.

எடுத்துக்காட்டுங்கள்..!

இதற்கு முன் நீங்கள் பெற்ற அனுபவத்தைக் கொண்டு இனி பணிபுரியும் வேலை குறித்தும், அதனை மேம்படுத்துவது குறித்தும் சில எடுத்துக் காட்டுக்களை கூறுங்கள். உதாரணத்திற்கு “இந்த வழிமுறையை பின்பற்றினால் தற்போதை விட இலக்கை இன்னும் எளிதாக அடையலாம்” போன்று.

மேலும் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka Job Facebook :- Liked

Srilanka Job Facebook Group :- Joined

Srilanka Job Viber Group :- Joined

Srilanka Job Whatsapp Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இந்த விசயம் மட்டும் தெரிந்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

அம்மு

ஆபீசுல எப்பவும் ஜாலியா இருக்க இத டிரை பண்ணி பாருங்க!

அம்மு

நீங்களும் இங்கிலீசுல பீட்டர் விடணுமா ? இந்த சேனல பாருங்க!!

அம்மு