12.8 C
Manchester
20 May 2022
Image default
இலங்கை

இலங்கையில் பரவும் மற்றுமொரு வைரஸ் – கடும் எச்சரிக்கை

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸைத் தவிர மற்றுமொரு வைரஸ் பரவி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

தற்போது நாட்டில் பல வைரஸ்கள் பரவி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

கொவிட்-19 உடன், இதேபோன்ற ஒரு வைரஸும் பரவி வருவதாகக் கூறிய அவர், மறுபுறம், டெங்கு வைரஸும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

புதிய வைரஸ் பரவல் காரணமாக நாடு பாரதூரமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், ஒமைக்ரோன் மாறுபாடு அல்லது கொரோனா வைரஸின் பிற புதிய வகைகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரச தலைவர், சுகாதார அமைச்சகம் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.

சிறப்பு மருத்துவர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுகாதார நிபுணர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவினால் இந்த அறிக்கை தொகுக்கப்பட உள்ளது.

Related posts

நெருக்கடியான சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் பலரையும் திரும்பி பார்க்கவைத்த செயல்

SudarSeithy

சுமார் 1500 அத்தியாவசியப் பொருட்கள் கொழும்பில் தேங்கியுள்ளதாக தகவல்

SudarSeithy

ரணிலிடம் மன்னிப்பு கோரிய கோட்டபாய! சூடு பிடித்த சர்வகட்சி மாநாடு

SudarSeithy