20 May 2022
Image default
உலகம்

ஆப்கானில் துயரம் – உணவுக்காக சிறுநீரகத்தை விற்கும் மக்கள்

வேலையிழப்பு, பஞ்சம் ஆகியவற்றால் ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களில், மக்கள் தமது சிறுநீரகத்தை விற்று உணவு தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெரட் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் 100-க்கும் மேற்பட்டோர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

ஒரு சிறுநீரகத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.70,000 வரை வழங்கப்படுவதாகவும், 5 வயது முதலான சிறுமிகளின் சிறுநீரகங்களும் விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தங்களுக்கு உதவுமாறு உலக நாடுகளிடம் தலிபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இதேவேளை உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான சொத்துக்களைப் பயன்படுத்த அனுமதிக்காத நிலையில், கடுமையான நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அநாட்டில் சுமார் 2.2 கோடி மக்கள் தற்போது பசியில் வாடி வருவதாகப் பொருளாதார வல்லுனரான அப்துல் நசீர் ரிஷ்டியா தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரே ஒரு போஸ்ட் ; நிற்காமல் கொட்டும் பண மழை!

SudarSeithy

போர்வையை வைத்தாவது உடம்பை மூடிக்கொள்ள வேண்டும்; தலிபான்கள் கடும் உத்தரவு

SudarSeithy

புதினுக்கு இவ்வளவு நோய்களா.! போருக்கு இதுவே காரணம்: உளவுத்துறை அதிர்ச்சி தகவல்

SudarSeithy