தமிழ் சினிமாவில் ‘ஈரமான ரோஜாவே’ என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை மோகினி
‘புதிய மன்னர்கள்’, ‘நானா பேச நினைப்பதெல்லாம்’, ‘நாடோடி பாட்டுக்காரன்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இவர் ஒரு சில தொலைக்காட்சி தொடரில் கூட நடித்துள்ளார். இவர் அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நீங்க அழகுடன் வலம் வகின்றார்.
அந்தவகையில் நடிகை மோகினி தனது முக அழகை எப்படி பராமரிக்கின்றார் என்று பகிர்ந்துள்ளார். தற்போது அவை என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.
இரவு உறங்கும் முன் மேக்கப்பை கழுவி விட்டு தூங்குவது நல்லது.
மாதுளை பழ எண்ணெய், தேங்காய் எண்ணெய், ரோஜா பூ இதழ் எண்ணெய் போன்றவவை முகத்திற்கு பயன்படுத்தலாம்.
பயத்தமாவு, கடலைமாவு போட்டு முகம் கழுவுவது நல்லது.
வெந்தயம், சின்ன வெங்காயம் போன்றவற்றை அரைத்து தலைக்கு குளிப்பது முடிக்கு நல்லது.
கண் மேக்கப்பை நீக்க விளக்கெண்ணைய் பயன்படுத்தலாம். முகத்திற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.
முகப்பரு இருந்தால் தேங்காய் எண்ணெய்யுடன், சிறிது எலுமிச்சை கலந்து பயன்படுத்தலாம்.
வெயில் சென்று வருபவர்கள் மாதுளைப்பழ எண்ணெய் பயன்படுத்தி வரலாம்.
நகங்கள், முடிகள் நன்றாக வளர பால் அருந்துவது அவசியம். இதில் கால்சியம் அதிகம் அதிகம் உள்ளதால் இது நன்றாக உதவு புரிகின்றது.