தொழில்நுட்பம்

Samsung Galaxy Z Fold 2 கைப்பேசியின் புகைப்படம் வெளியானது

சாம்சுங் நிறுவனம் கடந்த வருடம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசியானது மக்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றிருந்த நிலையில் இவ் வருடம் மற்றுமொரு மடிக்கக்கூடிய கைப்பேசியினை அறிமுகம் செய்ய சாம்சுங் நிறுவனம் காத்திருக்கின்றது.

எதிர்வரும் மாதமளவில் Samsung Galaxy Z Fold 2 எனும் குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் தற்போது குறித்த கைப்பேசி தொடர்பான சில புகைப்படங்கள் ஊடகங்களில் கசிந்துள்ளன.

இக் கைப்பேசியானது 7.59 அங்குல அளவுடைய தொடுதிரையையும், 6.23 எனும் இரண்டாம் நிலை தொடுதிரையினையும் கொண்டுள்ளது.

அத்துடன் பிரதான நினைவகமாக 12GB RAM மற்றும் 256GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் 64 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என மொத்தமாக 3 பிரதான கமெராக்களையும், 10 மெகாபிக்சல்களை உடைய ஒரு செல்ஃபி கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.

இக் கைப்பேசி எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Technology News Facebook :- Liked

Facebook Group :- Joined

Technology News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பயனர்களிடத்தில் சரணடையும் Zoom

அம்மு

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உங்கள் பணத்தினை மீளப்பெற்றுக்கொள்வது எப்படி?

அம்மு

கொரோனா வைரஸ் அப்பிளிக்கேஷனால் ஆபத்து

அம்மு