இந்தியா

தங்கம் போல் பொன்னிறத்தில் மின்னுகிறது! ஆர்வமுடன் செயல்பட்டு வருமானம் ஈட்டும் இலங்கை தமிழ் பெண்கள்… ஆச்சரிய பின்னணி

தமிழகத்தில் தங்க காசு மாலையை போல் நேர்த்தியாக தயாரிக்கப்படும் காசு மாலை தயாரிப்பில் இலங்கை தமிழ்பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ஓணம் பண்டிகை பிரசித்தி பெற்றது. பண்டிகைக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்படுகிறது.

இதோடு கதக்களி, காளியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பண்டிகையில் முக்கிய இடம் பெறுகிறது .இதன் நாட்டிய கலைஞர்களுக்கு தேவையான ஆபரணங்களை விருதுநகர் குல்லுார்சந்தையில் பெருமளவு தயாரிக்கின்றனர். இதில் காசு மாலை சிறப்பு வாய்ந்தது.

ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பெண்கள் தங்களின் அன்றாட குடும்ப வேலைகளை முடித்து விட்டு காசு மாலை தயாரிப்பில் பிசியாக உள்ளனர்.

ஜிகுஜிகுவென தங்கம் போல் பொன்னிறத்தில் மின்னும் ஒரிஜினல் காசு மாலையை விஞ்சும் வகையில் கலைநுட்பத்துடன் தயாரிக்கின்றனர். இதன் மூலம் தினமும் ரூ.150 முதல் ரூ.200 வரை சம்பாதிக்கின்றனர். கொரோனா ஊரடங்கை முன்னிட்டும் சுய தொழில் முனையும் பெண்கள் பலர் இதில்ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்.

சென்னை, மும்பையில் இருந்து காசு மாலை தயாரிப்புக்கான மூலப்பொருட்களை வாங்கப்படுகிறது, தங்க காசு மாலையை போல் நேர்த்தியாக தயாரிக்கின்றனர்.

தமிழகத்தின் விருதுநகரில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமில் வசிக்கும் பெண்கள் பலர் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் இதில் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர்.

ஆர்டரின் பேரில் தமிழகம், கேரளா, மஹாராஷ்டிராவிற்கு காசு மாலைகள் அனுப்பப்படுகிறது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது என தெரியவந்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சென்னையில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதம் உச்சநிலையை அடையும்

அம்மு

மனைவியை கொல்ல பயன்படுத்தப்பட்ட நாகம் ஏன் கணவரை தாக்கவில்லை? வெளிவரும் அதிமுக்கிய தகவல்

அம்மு

பெண்களை மோசடி செய்த காசிக்கு ஆதரவாக யாரும் ஆஜராக கூடாது…- முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்

அம்மு