உலகம்

உலகில் பல நாடுகளை திரும்பி பார்க்க வைத்த நாட்டில் முதல் கொரோனா பலி! பீதியில் மக்கள்: திடீரென்று அதிகரிக்கும் பாதிப்பு

வியட்நானாமில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் திடீரென்று கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல் பலி கொரோனாவால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

உலகில் கொரோனாவை துரிதமாக கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாகவும் வைரஸ் தொற்றால் உயிரிழப்புகளையே சந்திக்காத நாடாகவும் வியாட்நாம் இருந்து வந்தது.

தெற்கிழக்கு ஆசிய நாடான வியாட்நாமில் கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் திகதி முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அங்கு அரசு நடத்திய பரிசோதனை மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதத்திற்கு மேல், அங்கு சமூக பரவல் முற்றுலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அரசு அறிவித்தது. இதனால் அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த உலகின் பல்வேறு நாடுகளும் வியட்நாமை திரும்பி பார்த்தன. அந்தளவிற்கு கொரோனா விஷயத்தில் வியட்நாம் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் டானங்கில் உள்ள பிரபல விடுதியில் புதிய கொரோனா பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

அந்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 45 பேருக்கு வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சற்று ஒரு வித பயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படாத நாடு என்ற பட்டத்தையும் வியாட்நாம் துறந்துள்ளது.

இன்று டானாங்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் தனது முதல் உயிரிழப்பை அந்நாடு பதிவு செய்துள்ளது.

இதுவரை அங்கு கொரோனாவால் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 நாட்களுக்கு பிறகு மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

3 மாதங்களின் பின்னர் திறக்கப்பட்ட பிரித்தானியாவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

அம்மு

கொரோனாவை தாண்டினாலும்.. உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு?

அம்மு

எங்கள் உள்நாட்டு விவகாரம்… தேவையின்றி குறுக்கீடு வேண்டாம்: பிரித்தானியாவை கடுமையாக எச்சரித்த சீனா

அம்மு