உலகம்

இரத்தமாக வாந்தி எடுத்து உயிரிழந்த நாய்! மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்… மக்களை கவலையில் ஆழ்த்திய சம்பவம்

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் முதல்முறையாக நாய் ஒன்று உயிரிழந்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 12 நாய்கள், 10 பூனைகள், ஒரு புலி, சிங்கம் ஆகியவற்றுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் எந்த மிருகங்களும் உயிரிழக்கவில்லை.

ஆனால், முதல் முறையாக மிருகங்கள் கொரோனாவில் உயிரிழப்பைச் சந்திப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். அந்நாட்டில் கொரோனாவால் 46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆனால், கொரோனா வைரஸ் வீட்டு வளர்ப்பு மிருகங்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது என எந்த சான்றும் இல்லை.

இந்த சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று நியூயோர்க்கில் உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து ஸ்டாடன் தீவைச் சேர்ந்த நாயின் உரிமையாளர்கள் ராபர்ட், அலிஸன் மஹோனி ஆகியோர் கூறுகையில், நாங்கள் வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த 7 வயது நாய் கொரோனாவால் உயிரிழந்தது. கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நாய்க்கு சுவாசக் கோளாறு இருந்தது.

மே மாதம் கால்நடை மருத்துவர் வந்து எங்கள் நாயை பரிசோதித்தபோது நாய்க்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, நாயின் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. கடந்த 11-ம் திகதி இரத்தமாக வாந்தி எடுத்து, உயிரிழந்தது என கூறியுள்ளார்.

நாயைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர் கூறுகையில் நாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உண்மைதான். ஆனால் கொரோனா வைரஸால் உயிரிழந்ததா எனக் கூற இயலாது. நாயின் இரத்தப்பரிசோதனையில் இலிபோமா எனும் புற்றுநோய் இருப்பது தெரிகிறது என கூறினார்.

அமெரிக்க அரசின் புள்ளிவிவரங்கள்படி,அந்நாட்டில் இதுவரை 12 நாய்கள், 10 பூனைகள், ஒரு புலி, ஒரு சிங்கம் ஆகியவை கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், எந்த மிருகமும் இறக்கவில்லை,

முதல்முறையாக நாய் இறந்துள்ளது. அதேசமயம், மிருகங்கள், வீட்டுவளர்ப்பு பிராணிகள் மூலம் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது என்ற உறுதியான மருத்துவ ஆய்வுகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வெற்றிக்காக சீன அதிபரிடம் கெஞ்சிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்? கசிந்த ரகசியம்: வெளிவராமல் தடுக்க முயற்சி

அம்மு

ஐ.எஸ் குழுவில் இணைந்த இளம்பெண் ஷமிமா பேகம் பிரித்தானியா திரும்பலாம்..! மேல்முறையீட்டு நீதிமன்றம் விதிகள்

அம்மு

மீண்டும் கொரோனா தொற்று பரவினாலும் இனி பிரான்ஸை முடக்கமாட்டோம்: முக்கிய பிரமுகர் தகவல்!

அம்மு