உலகம்

22 கத்திக்குத்துகளுடன் நிர்வாணமாக ஜன்னல் அருகே நின்ற பெண்ணின் கடைசி வார்த்தைகள்: தலையையும் வெட்ட முயன்ற நபர் கைது!

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், தான் ஆறு மணி நேரத்துக்கு முன் சந்தித்த ஒரு நபருடன் போதைப்பொருள் எடுத்துக்கொண்டு பாலுறவு கொள்ள எடுத்த முடிவு, அவரது கோர முடிவுக்கே வழிவகுத்துவிட்ட சோகம் பிரித்தானியாவில் நடந்துள்ளது.

பிரித்தானியரான Sarah Hassall (38), ராணுவத்தில் மதிப்பிற்குரிய பணியில் இருந்தவர்.

14 ஆண்டுகள் விமானப்படையிலும், ராணுவத்திலும் மற்றவர்கள் மதிக்கும் உயர் பொறுப்பில் இருந்த Sarahவின் இரத்தத்தில் போதைப்பொருள் இருந்தது தெரியவந்ததையடுத்து, ராணுவத்திலிருந்து வெளியேறியதோடு கணவனிடமிருந்தும் பிரிந்து வாழ்ந்தார் அவர்.

Sarahவுக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நேற்று வரை பலரும் மதிக்கத்தக்க உயர் பதவியிலிருந்துவிட்டு, ஒரு சாதராண குடிமகளாக வாழும் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள இயலாததால், போதையின் பக்கம் திரும்பியிருக்கிறார் Sarah.

இந்நிலையில், மதுபான விடுதி ஒன்றில் Brian Manship (38) என்பவரை சந்தித்திருக்கிறார் Sarah.

மது அருந்தியபின், Brianஉடைய வீட்டுக்கு சென்று போதைப்பொருள் எடுத்துக்கொண்டு அவருடன் பாலுறவு கொள்ளவும் சம்மதித்து அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார் Sarah.

போன இடத்தில் போதையின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்த Brian, Sarah தன்னிடமிருந்து திருட முயன்றதாக கூறி அவரை தாக்கியிருக்கிறார்.

என்னை விடு, என்னை விடு என்று Sarah போட்ட சத்தத்தை பக்கத்து வீட்டிலிருக்கும் Philip Iveson என்பவர் கேட்டு எட்டிப்பார்த்திருக்கிறார்.

அப்போது, நான் வேண்டுமானால் மீண்டும் உன்னுடன் பாலுறவு வைத்துக்கொள்கிறேன், யாரிடமும் சொல்லமாட்டேன், என்னை விட்டுவிடு என Sarah கதறியழுததையும் கேட்டிருக்கிறார் Philip.

அத்துடன் ஜன்னல் அருகே பரிதாபமாக நின்று, ஜன்னல் கண்ணாடியை படபடவென தட்டி என்னைக் காப்பாற்றுங்கள் என கதறுவதையும் பார்த்திருக்கிறார் Philip.

பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டு, அவர்கள் வந்து பார்க்கும்போது, உடலில் 22 கத்திக்குத்துகள், ஏழு கீறல்களுடன் நிர்வாணமாக இறந்து கிடந்திருக்கிறார் Sarah.

அத்துடன் அவரது தலையை வெட்டி தனியாக எடுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

Sarahவை கொடூரமாக கொன்று விட்டு ஜன்னல் வழியாக தப்பியோடியிருந்த Brianஐ, பத்தே மணி நேரத்தில் கைது செய்தார்கள் பொலிசார்.

குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறையில் இருக்கும் வகையில் Brianக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பெய்ரூட் விபத்து: இடிபாடுகளுக்கு நடுவே கையில் குழந்தைகளுடன் நிற்கும் செவிலியர்- உலகை உலுக்கும் ஒற்றை புகைப்படம்

அம்மு

நீங்கள் செய்த உதவியால் இந்தியா பெருமையடைந்துள்ளது! இளம் மாணவியை பாராட்டி தள்ளிய பிரபலம்

அம்மு

வீடியோ அழைப்பில் திருமணம்… ஒப்புக்கொள்ளவே மறுத்த கனேடிய நிர்வாகம்: உடைந்து போன தம்பதி

அம்மு