செய்தி

யாழில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருக்கு கொழும்பில் தொற்று இல்லையென முடிவு!

யாழ். போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்பட்ட நபருக்கு கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ் போதனாசாலை 7ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த நபருக்கு மீளவும் இரண்டு தடவைகள் PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இரண்டு தடவைகளும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தொண்டா பிரிவினரால் அனில் ஜாசிங்கவுக்கு மிரட்டல்?

அம்மு

தேசிய அடையாள அட்டை விண்ணப்பதாரிகளுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

அம்மு

உயிருடன் இருக்கும் மாணவியின் படத்தை பயன்படுத்தி மரண அறிவித்தலை தயாரித்த நபர்களை தேடும் பொலிஸார்

அம்மு