செய்தி

மைத்திரிபாலவை பொதுஜன பெரமுனவினர் தூற்றுவதாக குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தூற்றும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் நடந்து கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இந்த வாரத்தில் கடிதம் ஒன்றை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அனுப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பந்துல வெல்லல இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சேறு பூசும் வகையில் கொழும்பு, கம்பஹா, பொலநறுவை போன்ற பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கருத்துக்களை கூறியுள்ளனர்.

இது இரண்டு கட்சிகளுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் உடன்பாட்டுக்கு எதிரான செயலாகும் என்று பந்துல சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் இந்த செயற்பாடு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நாட்டின் அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கும் முனைப்பாகவே கருதப்படுகிறது என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சட்டத்தரணிகள் சங்க தலைவர் பந்துல வெல்லல சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

புதிய நாடாளுமன்றத்தில் வெறும் 8 பெண்கள் மாத்திரமே!

அம்மு

நாட்டில் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலை சட்ட பூர்வமானதே! பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

அம்மு

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்?

அம்மு