வாழ்க்கைமுறை

சிவப்பழகை எளிதில் பெற வேண்டுமா? அப்போ கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க

இன்று சிவப்பழகை விரும்பும் பெண்கள் பணத்தையும், நேரத்தையும் அதிகமாக செலவழித்து கொண்டு வருகின்றார்கள்.

இருப்பினும் இது சிவப்பழகை பெற நிரந்தர தீர்வாக அமையாது. இதற்கு ஒரு சில இயற்கை பொருட்களை கொண்டு எளிய முறையில் சிவப்பழகை பெற முடியும்.

அதில் கற்றாழை பெரிதும் உதவி புரிகின்றது. ஏனெனில் கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகளும் விரைவில் நீங்கும்.

அந்தவகையில் இயற்கை முறையில் சிவப்பழகை பெற கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையானவை
  • கற்றாழை ஜெல்- 1 கப்
  • காட்டேஜ் சீஸ்- சிறிதளவு,
  • பேரிச்சம் பழம்- 1
  • வெள்ளரிக்காய்- 1
செய்முறை

கற்றாழை ஜெல்லுடன் காட்டேஜ் சீஸ் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அதனுடன் பேரிச்சம்பழத்தினை நசுக்கிக் கலக்கவும்.

இறுதியாக வெள்ளரிக்காயினை துண்டுகளாக்கி தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டினை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்துவந்தால் முகமானது சிவப்பழகு பெறும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Health News Facebook :- Liked

Facebook Group :- Joined

Health News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மனிதர்களை கொரோனா வைரஸ் கொல்வது எப்படி?

அம்மு

மீன் சாப்பிடும்போது தப்பித்தவறி இதை சேர்த்து சாப்பிட்டு விடாதீங்க?

அம்மு

அழகுக்கு மட்டுமல்ல… உடல் பராமரிப்பிற்கும் உதவும் பீட்ரூட் ஜூஸ்! எப்படி தயாரிப்பது?

அம்மு