வாழ்க்கைமுறை

வறட்டு இருமல் நிக்காமல் வருதா? கவலை வேண்டாம்! இந்த ஒரே ஒரு பொருள் போதும்

பொதுவாக பருவ மாற்றத்தால் சளி, காய்ச்சல் உருவாகி நம்மை பாடாய் படுத்தும்.

அதில் வறட்டு இருமல் வந்து விட்டால் போதும் சிலருக்கு இருமி இருமியே தொண்டை, வயிறு மற்றும் மார்புப் பகுதிகள் வலிக்க ஆரம்பித்து விடும்.

இதற்காக அடிக்கடி மருந்துகளை போடுவதை தவிர்த்து இருமலை உடனே குணப்படுத்த நீங்கள் துளசி இலைச்சாற்றை எடுத்து வரலாம்.

ஏனெனில் துளசியில் ஏகப்பட்ட பாரம்பரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளது.

துளசி இலைகள் நுண்ணுயிர் தொற்று நோய் களுக்கு சிகச்சை அளிப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கரிப்பதற்கும், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளை களையவும் உதவுகிறது.

ஆனால் துளசி இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு தேநீர் எந்த நேரத்திலும் ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் பிற நுரையீரல் நோய்களை நீக்க பயன்படுகிறது.

அந்தவகையில் வறட்டு இருமலை போக்க கூடிய ஓர் அற்புத பானம் ஒன்றினை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

தேவையானவை
  • துளசி இலை – 5-7
  • ஏலக்காய்
  • இஞ்சி
  • கருப்பு மிளகு
  • தேன்
செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் மற்றும் 5-7 துளசி இலைகளை போட வேண்டும். 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடுங்கள்.

இப்பொழுது பாத்திரத்தை மூடி துளசி இலைகளை அப்படியே விட்டு விடுங்கள்.

அடுப்பை அணைத்து விட்டு டீ ஆறியதும் அதை வடிகட்டி வெதுவெதுப்பாக அந்த நீரை குடிக்கவும். வறட்டு இருமல் காணாமல் போய் விடும்.

ஏலக்காய், இஞ்சி, கருப்பு மிளகு மற்றும் தேன் சேர்த்து சளிக்கு பயன்படுத்துங்கள். இதை தினமும் குடித்து வரும் போது இருமலுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

புதிய துளசி இலைகளை தேனுடன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள். இதுவும் உங்க வறண்ட இருமலை குணப்படுத்த உதவி செய்யும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Health News Facebook :- Liked

Facebook Group :- Joined

Health News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

நாய்களின் நோயால் மனிதர்களுக்கு தோல் நோய், மூச்சுத் திணறல் ஏற்படும்! ஓர் எச்சரிக்கை செய்தி

அம்மு

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உங்கள் வீட்டில் உள்ளனரா? கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான புதிய எச்சரிக்கை

அம்மு

மனிதன் சர்க்கரையை ஒதுக்கினால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா?

அம்மு