வாழ்க்கைமுறை

வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் அத்திக்காய்!

அத்திக்காய் துவர்ப்பு சுவையுடையது. அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து குழம்பு வைத்தால் சுவையும் இருக்கும். ஆரோக்கியமும் கிடைக்கும். அத்திக்காயில் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் A யும் சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்பு சத்தும் அதிக அளவில் இருக்கும்.

அத்திக்காயின் மருத்துவ குணங்கள்

  • அத்திக்காயைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வெள்ளை ஒழுக்கை நிறுத்தும். சீதபேதியை குணமாக்கும். வாயுவைப் போக்கும். இரத்த மூலத்தை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
  • உடலிலுள்ள இரணங்களை ஆற்றக் கூடியது. வெட்டை நோயை குணப்படுத்தும்.
  • அத்திக்காய் வயிற்று புண்னுக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படும். வயிற்றில் புண் இருக்கும் காலங்களில் இதை உணவுகளில் சேர்த்துக்கொண்டாலே போதும் நல்ல பலனை உணர்ந்து கொள்ளலாம்.
  • அமர்ந்து தியானம் செய்வதற்கு இந்த அத்தி மரத்திலிருந்து பலகைகளை செய்வார்களாம். இந்த மரப்பலகைகள் தியானத்தின் சக்தியையும் மன ஒருமைப்பாட்டையும் நமக்கு அளிக்கும்.
  • இந்தக் காயின் சுபாவம் குளிர்ச்சி. அத்திப் பிஞ்சினால் மூலம், வாயு, மூலக் கிராணி, வயிற்றுப்புண், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு, ஆகிய அனைத்து விதமான பிரச்சினைகளும் குணமாகும். மேலும் இது பத்தியத்திற்கு ஏற்றதாகும்.
  • அத்திக்காய் தேவையான அளவு வாங்கி வந்து அவற்றை நான்கு துண்டுகளாக நறுக்கி அதில்லுள்ள விதைப் பகுதியை சுரண்டி எடுத்துவிடலாம்.
  • அதிக்காயின் நடுவில் பூச்சு மற்றும் பூழு இருக்கலாம் அதை நன்கு கவனித்து சுத்தப்படுத்த வேண்டும். நறுக்கிய பின் தண்ணீரில் போட்டு நன்கு கழுவ வேண்டும்.
  • அத்திக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, சுண்ணாம்புச் சத்து ஆகியவைகள் உள்ளன. மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுத்து விடும்.
  • போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க, அத்திப்பழங்களைக் காடியில் (வினிகர்) ஒரு வாரம் வரை ஊறவைத்து, அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிட்டால் மிகவும் சிறந்தது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Health News Facebook :- Liked

Facebook Group :- Joined

Health News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மலச்சிக்கல் பிரச்சனை வந்ததால் தினம் 2 முறை இதை செய்தால் போதும்! ஓடியே போய்விடும்

அம்மு

அசிங்கப் படுத்தும் பேன் தொல்லைக்கு 1மணி நேரத்தில் தீர்வு..! இது அனுபவ உண்மை …அதிகம் பகிருங்கள்..!!

அம்மு

சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும் இதோ சில எளிய வழிமுறைகள்!

அம்மு