விளையாட்டு

ஒரு மணி நேரத்தில் சதம் அடிக்கிறேன் என்றார்… சாதித்துக் காட்டினார்: பாலாஜி புகழும் அந்த வீரர் யார்?

ஒரு மணி நேரத்தில் சதம் அடிப்பேன் என சொல்லிட்டு செய்து காட்டுவார் முன்னாள் இந்திய மற்றும் தமிழக வீரர் பத்ரிநாத் என்று வேகப் பந்துவீச்சாளர் எல்.பாலாஜி பெருமையாக பேசியுள்ளார்.

இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுடன் நேரலையில் யூடியூப் சேனலுக்கு பேசிய எல்.பாலாஜி,

துடுப்பாட்ட வீரர் பத்ரிநாத் குறித்த சுவையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில்,

யாராவது விளையாட்டாக நான் சதமடிக்க போகிறேன் என சொல்லிவிட்டு களத்தில் இறங்குவதை பார்த்திருக்கிறீர்களா.

நான் அதை 2005 இல் பார்த்தேன். அவர்தான் பத்ரிநாத். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு பத்ரிநாத்தை பல கோணங்களில் பார்த்திருக்கிறேன்.

பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக அவர் இருந்தார் என்றார். ஒரு போட்டியில் இன்னும் 1 மணி நேரத்தில் சதமடிக்கிறேன் என என்னிடம் சொல்லிவிட்டு களமிறங்கினார்.

உள்ளூர் போட்டியில் மிகச் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசிக்கொண்டிருந்தனர். ஆனால் சொன்னதுபோலவே செய்தார்.

மேலும் கூறிய பாலாஜி, பத்ரிநாத் டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல டி20 போட்டியையும் தன்னால் விளையாட முடியும் என ஐபிஎல் தொடரில் நிரூபித்தார்.

துடுப்பாட்டநுட்பத்தில் பத்ரிநாத் மிகவும் புத்திசாலி, அவரின் விக்கெட்டை எளிதாக வீழ்த்த முடியாது.

ரஞ்சிப் போட்டியில் ஆட்டத்தின் ஒரு பாதியில் சதமடிக்க முடியும் என நிரூபித்தவர் என நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Sport News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Sport News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சச்சினின் சாதனையை கோஹ்லி முறியடிப்பார்: அடித்துச் சொல்லும் பிரபல வீரர்

அம்மு

கொரோனாவால் எங்களுக்கு எதாவது ஆனால் என்ன செய்வது? அதிரடி முடிவெடுத்த 3 முன்னணி கிரிக்கெட் வீரர்கள்

அம்மு

டோனிக்கு ஓய்வுக்கு பெறும் எண்ணம் இருக்கிறதா? அவர் கவனம் எல்லாம்… மேனேஜர் சொன்ன தகவல்

அம்மு