செய்தி

மாயாஜாலங்களை செய்து வென்றாலும் எம்.பி பதவியை இழப்பது உறுதி

வேலைவாய்ப்பை வழங்குவேன் என தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர் ஒருவர், வெற்றி பெற்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மாயாஜாலங்களைக் காண்பித்து அவர் வெற்றிபெற முயற்சிக்கின்றார். அவ்வாறு அவர் தேர்தலில் வெற்றிபெற்றாலும் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்ற பரப்புரைக் கூட்டம் தெல்லிப்பளையில் நேற்று (01) இடம்பெற்றது.

அதில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“வேலைவாய்ப்பு வழங்குவேன் என்று வேட்பாளர் ஒருவர் இளையோர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்கிறார். அவ்வாறு வேலைவாய்ப்பை வழங்க முடியாது.

இந்த நடவடிக்கை தேர்தல் விதிமுறை மீறலாகும் அந்த வேட்பாளரால் பல தேர்தல் விதிமுறை மீறல்கள் செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பில் பல முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அவர் பல மாயாஜாலங்களைச் செய்து தேர்தலில் வெற்றிபெற்றாலும் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழப்பார்” என சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

நுவரெலியா மாவட்ட இறுதி முடிவுகள்

அம்மு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவி தொடர்பான தகவல்!

அம்மு

பொதுத் தேர்தல் முடிந்தவுடன் ஊரடங்குச் சட்டமா? அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

அம்மு