15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

யாழ். மீசாலையில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்

யாழ். மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் மீசாலைக்கும், சாவகச்சேரிக்கும் இடைப்பட்ட ஐயா கடையடிப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அந்த பகுதியில் அழகு சாதன வர்த்தக நிலையம் நடத்தும் 35 வயதுடைய வர்த்தகர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார் என தெரியவருகிறது.

படுகாயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மகனால் தந்தைக்கு நேர்ந்த பெரும் சோகம்

SudarSeithy

இலங்கைக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை!

SudarSeithy

யாழ்ப்பாணத்தில் மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

SudarSeithy