அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்ததால் கோடீஸ்வரர் ஆகியுள்ளார் குடும்ப தலைவர் ஒருவர்.
ப்ளோரிடாவை சேர்ந்தவர் கென்னித் மோர்கன் (54). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி லொட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கினார்.
பின்னர் அது குறித்து மறந்துவிட்ட கென்னித் தனது தொழிலில் மூழ்கினார். இந்த நிலையில் சமீபத்தில் ஓய்வு நாளில் தனது வீட்டை வெகுநாட்களுக்கு பின்னர் சுத்தம் செய்தார் கென்னித்.
அப்போது வீட்டின் அறையில் இருந்த ஒரு அலமாரியை திறந்து சுத்தம் செய்த போது அதில் லொட்டரி சீட்டு இருப்பதை கண்டார்.
உடனே அந்த லொட்டரிக்கு எண்ணுக்கு பரிசு விழுந்ததா என பார்த்த போது அவர் இதயமே நின்று போகும் அளவுக்கு அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் அந்த சீட்டுக்கு $1 மில்லியன் பரிசு விழுந்திருந்தது. தற்போது வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்கிறார் கென்னித்.
இந்த பரிசு பணத்தை அவர் என்ன செய்ய போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.