14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

பிறந்த சிசுவை கொலை செய்து எரியூட்டிய தாய் – நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

கந்தளாய் – பேராறு பிரதேசத்தில் பிறந்த பெண் சிசுவை கொலை செய்து தீ வைத்து எரித்த தாய் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டள்ளது.

இம்மாதம் 28 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று உத்தரவிட்டுள்ளார்.

கந்தளாய் பேராறு மத்ரஸாநகர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சுபியான் பாரூக் பௌமியா என்ற பெண்னொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை தவறான உறவின் மூலம் பிறந்த சிசுவை கொலை செய்து எரித்த குற்றச் செயலுடன் தொடர்புடைய மூன்று பிள்ளைகளின் தாயாரை கந்தளாய் பொலிஸார் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரின் கணவர் வெளிநாடு சென்றுள்ள நிலையிலே இவ்வாறு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

தமிழர்களின் மனதை இன்னும் வெல்லவில்லை: ஜனாதிபதி கோட்டாபயவுக்கு பறந்த கடிதம்

SudarSeithy

மாமாங்கேஸ்வரர் தீர்த்தம்; 500 பேரை வலைவீசி தேடும் சுகாதார தரப்பினர்

SudarSeithy

யாழில் ரகசிய காணி அபகரிப்பு? தடுக்க அணிதிரளுமாறு அழைப்பு

SudarSeithy