இலங்கை கிரிக்கெட் சபையிலுள்ள உயரதிகாரிகளை அவசர பேச்சு ஒன்றை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதோடு இலங்கை கிரிக்கெட் குழுவுக்கும் இதற்கான அழைப்பு சென்றிருப்பதாக கூறப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக இலங்கை கிரிக்கெட் அணி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தொடர் தோல்வி, அணிக்கும், சபைக்கும் இடையேயான முரண்பாடுகள் என பல விடயங்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய இந்த விசேட அழைப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.