13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

பஷிலுக்கு டெல்லியிலிருந்து வந்த வாழ்த்து கடிதம்; நேரடியாக கையளித்த இந்திய உயர்ஸ்தானிகர்

புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பஷில் ராஜபக்ஷவிற்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரின் வாழ்த்து கடிதத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை நேரில் சந்தித்து கையளித்துள்ளார்.

இதன்போது கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் பின்னர் உலகளாவிய பொருளாதார மீட்சி என்ற பின்னணியில் பொருளாதாரத்துறையில் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் சந்திக்கும் வெளிநாட்டு இராஜதந்திரி இவர் ஆவார்.

கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பூகோளிய பொருளாதாரத்தில் இருந்து மீள்வது குறித்து இலங்கை அதிக கவனம் செலுத்தியுள்ள நிலையில் பொருளாதார விடயங்களில் ஆசிய வலய நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நிதியமைச்சர் உள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

Related posts

எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கும் கொரோனா!

SudarSeithy

யாழில் தொடரும் சோகம்; குழந்தை பிரசவித்து 10 நாட்களான தாய் உட்பட 8 பேர் பலி!

SudarSeithy

யாழில் இருந்து காதலனுக்காக வெளிநாடு விரைந்த பெண்ணிற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

SudarSeithy