13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு

விகாரைக்கு கொண்டுச் செல்வதற்காகப் பூக்களைப் பறித்து வருவதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறிச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலம் வெலிகம, கடற்கரையில் இன்று கரையொதுங்கியுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெலிகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 57 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

குறித்த நபர் மேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் வீடு திரும்பாததால் அவரைத் தேடும் பணியில் உறவினர்களும் பிரதேச மக்களும் இணைந்து ஈடுபட்டு வந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தினமும் விகாரைக்குப் பூக்களை வழங்கி வருபவர் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கொழும்பு வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

SudarSeithy

கட்சித் தலைவர் கூட்டத்தை உடன் கூட்டுங்கள்: சபாநாயகரிடம் சஜித் கோரிக்கை

SudarSeithy

அதிவேக நெடுஞ்சாலையில் ராஜபக்ஷர்களுக்கு இலவசம்

SudarSeithy