கொழும்பு கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரத்துடன் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இதுபற்றி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக தன்னுடன் நெருக்கமான ஒருவரும் தொடர்பு பட்டிருப்பதாக வெளியாகிய தகவலும் பொய்யானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.