13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

அதிகரிகரிக்கும் தொற்றாளர்கள்; யாழ்.பருத்தித்துறை முடக்கப்படும் சாத்தியம்

யாழ்.பருத்தித்துறை நகரை அண்டிய 1ம், 2ம், 3ம் குறுக்கு தெருக்களில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை எழுமாறாக 156 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்.

ஏனைய 17 பேரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதவேளை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பீ.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். அவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதிகள் முடக்கல் நிலைக்கு உட்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

‘இந்த நாட்களில் காய்ச்சல் ஏற்பட்டால் நிச்சயம் இதுவாக தான் இருக்கக்கூடும்’ – ஹிமாலி ஹேரத்

SudarSeithy

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இரகசியமாக கொண்டு வரப்படும் பீட்ரூட் – வர்த்தகர்கள் விடுத்துள்ள கோரிக்கை

SudarSeithy

முடிந்தால் இந்த வாரமே ஒழித்துக்கட்டவேண்டும்!

SudarSeithy