13.8 C
Manchester
27 June 2022
Image default
உலகம்

111 நாடுகளுக்கு பரவிய டெல்டா; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

111 நாடுகளில் காணப்படும் ‘டெல்டா’ வகை வைரஸ், பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு வாராந்திர தொற்றுநோய் புள்ளிவிபர பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் உலகில் 111 நாடுகளில் அதிக வீரியமுள்ள ‘டெல்டா’ வைரஸ் பரவியுள்ளதாகவும் , டெல்டா, ஆல்பா, காமா, பீட்டா என நான்கு வகை உருமாறிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மிக விரைவாக பரவும் ஆற்றல் டெல்டாவுக்குத் தான் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

குறிப்பாக மிகக் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் சுகாதார வசதிகளை உருவாக்குவதில் அதிக நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் 178 நாடுகளில் ஆல்பா வைரஸ் பரவல் பரவியுள்ள நிலையில், பீட்டா, காமா வைரஸ்கள் முறையே 123 மற்றும் 75 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

Related posts

உக்ரைனில் கொள்ளையடித்த ரஷ்ய வீரர்கள்! சிசிடிவி-யில் சிக்கிய காட்சி

SudarSeithy

பொருளாதார தடைகளை நீக்கினால்… உணவு ஏற்றுமதிக்கு துறைமுகங்கள் திறக்கப்படும்: ரஷ்யா அறிவிப்பு

SudarSeithy

தனக்கென தனிப்பாதை அமைத்த டிரம்ப்!

SudarSeithy