13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

யாழில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா! நேற்று மட்டும் 99 பேர் அடையாளம்

யாழ்.மாவட்டத்தில் 99 பேர் உட்பட வடக்கில் 111 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

அதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 53 பேர் உட்பட வடக்கில் 65 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது,

அத்துடன் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 38 பேருக்கும், தம்பாட்டி கிராமத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8 பேருக்குமாக யாழ்.மாவட்டத்தில் 99 பேர் உட்பட வடக்கில் 111 பேருக்கு தொற்று உறுதியானது.

இதேவேளை கடந்த சில நாட்களில் குறைந்துவந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை யாழ்.மாவட்டத்தில் மீண்டும் சடுதியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மக்கள் சுகாதார முறைகளை கடைப்பிடித்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி

SudarSeithy

இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா உயிரிழப்புகள்!

SudarSeithy

உலகெங்கும் மின்னல் வேகத்தில் பரவும் ஒமிக்ரோன்! இலங்கை மக்களுக்கு விசேட அறிவித்தல்

SudarSeithy