இலங்கையின் பிரபலமான ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனம், அரசாங்கத்தின் மிகநெருக்கமான வர்த்தர் ஒருவருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த தகவலை ஈ.டி.ஐ வாடிக்கையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த நிறுவனம் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பிரசித்தமான மற்றும் பிரமாண்டமான நிறுவனம் ஒன்றின் உள்நாட்டு நிறுவனத்திற்குக் கீழ் உள்ளது.
அதன் தலைவர் தற்போது இந்திய சினிமாவில் தயாரிப்பு மன்னராகத் திகழ்கின்றார்.
இந்த நிலையில் ஸ்வர்ணவாஹினி நிறுவனமானது கொள்வனவு செய்யப்பட்டதில் ஊழல்கள் இருப்பதாகத் தெரிவித்து குற்றப் புலனாய்வுப்பிரிவில் முறைப்பாடு ஒன்றும் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.