14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

இலங்கையில் டெல்டா தொற்றாளர்கள் அதிகரிக்கலாம் என அச்சம்

இலங்கையில் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

டெல்டா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருக்கின்ற 16 பேரது மாதிரிகள் கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலுள்ள ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அந்த மாதிரிகளின் இறுதி ஆய்வு முடிவுக்ள நாளை வெளிவரவுள்ள நிலையில் நாட்டில் டெல்டா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் தற்போதுவரை 38 டெல்டா தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதிக்கு எதிரானவர்கள் யாரென தெரிய வரும் நாள்?

SudarSeithy

யாழில் 29 மில்லியன் ரூபா கேரள கஞ்சாவுடன் சிக்கிய மூவர்

SudarSeithy

தாக்குதலை தடுத்து நிறுத்திய இலங்கையர்; கௌரவித்த சிங்கப்பூர்!

SudarSeithy