புகையிரத திணைக்களத்தினுள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகையிர தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் புகையிரத போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக புகையிரத ஓட்டுனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
மினுவங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகளை போன்று தற்போது புகையிரத கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதை வரையில் ஒரு நாளுக்கான 20 -25 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் புகையிரதங்களில் கூட்டமாக பயணிப்பதால் பயணிகளுக்கு கொவிட் பரவும் அபாயம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.