15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

முல்லைத்தீவு – முறிகண்டியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முறிகண்டி, செல்வபுரம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் வீட்டின் உரிமையாளரான (61 வயது) குஞ்சுமோகன் அசோகன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசுவது தொடர்பாக அயலவர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலமாக அடையாளம் காணப்பட்டவரின் மனைவி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிள்ளைகள் தொழில் நிமித்தம் வேறு பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து சம்ப இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வரும் நிலையில், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

முகப் புத்தகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படம்; 4 பேர் பிணையில் விடுவிப்பு

SudarSeithy

இலங்கையின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்

SudarSeithy

இன்று இருளில் மூழ்கவுள்ள நாட்டின் பலபகுதிகள்!

SudarSeithy