முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர் தற்போது வரை அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக, வாய்மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கொழும்பிற்கு இன்று அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டமைக்கு பரவலான எதிர்ப்புக்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.