விளையாட்டு

ஐபிஎல் 2020… ராஜஸ்தான் அணியில் ஒருவருக்கு கொரோனா உறுதி! சோகத்தில் ரசிகர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் ஐபிஎல் தொடர் துவங்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக இந்தியாவில் நடைபெறவுள்ல ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

இதற்காக ஐபிஎல் அணிகள் 21-ஆம் திகதி துபாய்க்கு புறப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

புறப்படுவதற்கு முன் அனைத்து அணியை சேர்ந்த வீரர்களுக்கும், உதவியாளர்களுக்கும், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இரண்டு முறை நடைபெற உள்ளது.

இந்த இரண்டு பரிசோதனைகளின் முடிவில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியான பிறகு தான் வீரர்கள் துபாய் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் அணிக்கு ஒரு பின்னடைவாக அந்த அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தனது டுவிட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ள அவர் கடந்த 10 நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பிசிசிஐயின் வழிகாட்டு நெறி முறைப்படி 14 நாட்கள் நான் என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியுடன் இணைய எனக்கு இன்னும் இரண்டு நெகட்டிவ் முடிவு தேவை என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரபல நடிகையை திருமணம் செய்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்! வெளியான தம்பதியின் அழகிய புகைப்படங்கள்

அம்மு

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக செய்யப்படும் செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?

அம்மு

ஐ.பி.எல்லில் என்னை இந்த அணி எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த முரளிதரன்

அம்மு