18.9 C
Manchester
7 July 2022
Image default
இலங்கை

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அச் சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.

டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் நாட்டின் பல பாகங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டில் டெல்டா வகை வைரஸ் நாட்டில் தொடர்ந்தும் பரவலடைவதை தடுக்க வேண்டுமாயின் பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொற்றினை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Related posts

சிலமணி நேரம் திறந்த மதுக்கடை; பெண்கள் உட்பட 52 பேர் மருத்துவமனையில்!

SudarSeithy

மோட்டார் சைக்கிள் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது

SudarSeithy

நாமலின் ட்விட்டுக்கு பதிலளித்த ஹர்ஷ!

SudarSeithy