மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞன் நேற்று முன்தினம் இரவு தனது மாடுகளை பார்த்துவிட்டு வருவதாக தனது தாயிடம் கூறி விட்டுச் சென்ற பல மணி நேரங்கள் கடந்து வீடு திரும்பாத நிலையில் அவரின் உறவினர்கள் அவரை தேடி திரிந்த போதும் அன்று இரவு இளைஞரை கண்டுபிடிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் திக்கோடை பொது மயானத்தில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இளைஞர் உயிரிழந்தமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.