உலகளவில் உள்ள ஆன்லைன் வர்த்தக தளங்களில் முன்ணிகளில் ஒன்றாக இருப்பது அமேசான். இதன் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இதையடுத்து, 20 ஆம் தேதி ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க்கும் விண்வெளிக்கு பறக்க இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், மனிதர்களுடன் விண்ணுக்கு செலுத்தப்பட உள்ள விண்கலத்தில் அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் உடன் ஆலிவ் டையமென் ( Olive Daemen) என்ற 18 வயது இளைஞர் ஒருவரும் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
மேலும், சுமார் 28 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒரு இடத்தை அமேசான் நிறுவனம் ஆன்லைனில் ஏலம் விட்டது. இதில் முதல் பயணத்துக்கு ஜோஸ் டேமன் என்பவர் 208 கோடி ரூபாய் கொடுத்து, தனது 18 வயது மகன் ஆலிவரை விண்வெளிக்கும் அனுப்புகிறார்.
இதன் மூலம் வயதுகுறைந்த என்ற பெருமையை பெற்றவர் பெறுகிறார். வரும் 20ம் தேதி இந்த விண்கலம் ராக்கெட் மூலம் அமெரிக்கா -டெக்ஸாஸின் மேற்கு பாலைவனப்பகுதியில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.