சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தினத்தில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்திக்கவுள்ளதுடன், செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்து பேசவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் கடன் உதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் அடங்கிய யோசனைத் திட்டமொன்றையும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இதன்போது சமர்ப்பிக்கவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி பெறக் கூடாது என உறுதியாக இருந்து அரசு இப்போது இன் நடவடிக்கையை இரகசியமாக செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக விமல் வீரவன்ச கடும் எதிர்ப்பை வெள்ளியிட்டமை குறிப்பிடத் தக்கது.
கடந்த வருட பிற்பகுதி இவ் வருட தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை நிதியினைப் பெற வேண்டும் என தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பில் எதிர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி கூட்டங்கள் பலவற்றை நடத்தியதன் வெளிப்பாடாகவே இச் சந்திப்பு உற்றுப் பார்க்கப் படுவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.