சுற்றுலா

யானைகளைப் பார்க்க வேண்டுமா?: கவுடுல்ல தேசிய பூங்காவுக்கு வாருங்கள்

காட்டு யானைகளைப் பார்வையிடும் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றாகக் காணப்படும் கவுடுல்ல தேசிய வனவிலங்குப் பூங்கா, இந்நாட்களில், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பிரயாணிகளால் நிரம்பியுள்ளது.

சுமார் 6,200 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்ட இந்த வனவிலங்குப் பூங்காவினால், இவ்வருடத்தில் (2017) மாத்திரம், 2,560 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதென, அதன் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஜே.கே.ஹேரத் தெ​ரிவித்தார்.

8,300 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்ட கவுடுல்ல மின்னேரிய நுழைவும் மேலும் 8,300 ஹெக்டேயர் நிலப்பரப்கைக் கொண்ட மின்னேரியா தேசிய வனவிலங்குப் பூங்காவும், 9,100 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்ட சோமாவதிய தேசிய வனவிலங்குப் பூங்கா ஆகிய வனவிலங்குப் பூங்காவைச் சுற்றி அமைந்துள்ளதால், கவுடுல்ல தேசிய வனவிலங்குப் பூங்காவுக்கான உல்லாசப் பயணிகளின் வருகை மேலும் மேலும் அதிகரிக்கின்றது.

விசாலமான முறையில் அமைந்துள்ள சோமாவதிய தேசிய வனவிலங்குப் பூங்கா காரணமாக, நாளொன்றில் 500 முதல் 600 வரையான உல்லாசப் பயணிகள், காட்டு யானைகளைக் கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் கிட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுற்றுலா சொல்ல கூடிய இடம் பற்றி அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Travel Facebook :- Liked

Travel Facebook Group :- Joined

Travel Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

முல்லைத்தீவில் போர்க்கால வடுக்களையும் வலிகளையும் தாங்கி நிற்கும் ஓர் கிராமம்!

அம்மு

அரச மாளிகை

அம்மு

அழியாப் புகழைக் கொண்ட “சிகிரியா” சுற்றி பார்க்கலாம்

அம்மு