12 C
Manchester
20 October 2021
Image default
ஆன்மிகம்

பூஜையில் உடைக்கப்படும் தேங்காய் உணர்த்துவது என்ன…?

பூஜையில் உடைக்கப்படும் தேங்காய் அழுகியிருந்தால் நமக்கு உடல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம்.

உடைக்கப்படும் தேங்காய் சிதறி தூள் தூளாக உடைந்தால் நமக்கு தொழிலில் ஏதேனும் பிரச்சனை உண்டாகும். அல்லது பண விரையம் ஏற்படும் என்று அர்த்தம்.

தேங்காய் சிறிது கோணலாக உடைந்தால் ஏதேனும் சிறிய மனக்கவலைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது என்று அர்த்தம்.

ஆனால் இவற்றை எல்லாம் கெட்ட சகுனம் என்று என்ன வேண்டும். கடவுள் நமக்கு முன்கூட்டியே உணர்த்துகிறார் என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல நடந்துகொள்வது நல்லது.

பூஜை தேங்காய் உணர்த்தும் நல்ல பலன்:

தேங்காய் இரண்டு சரி பாதியாக வட்ட வடிவில் உடைந்தால் நாம் நினைத்த காரியங்கள் நன்றாக நிறைவேறும். துவங்கவிருக்கும் காரியமும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நல்லவிதமாகவே நடைபெறும் என்று அர்த்தம்.

உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால் உங்கள் மனதிற்கு சந்தோஷம் அளிக்கக் கூடிய விஷயங்கள் நடக்க போகிறது என்று அர்த்தம். மற்றும் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளும் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Related posts

வாஸ்துப்படி தெற்குதிசை பார்த்த வாசல் வைக்கலாமா…!

SudarSeithy

வார ராசிப்பலன் – ஆகஸ்ட் 8 முதல் 14 வரை 2021

SudarSeithy

இன்றைய ராசிப்பலன் – 10.08.2021

SudarSeithy