23.5 C
Manchester
23 July 2021
Image default
உலகம்

விஸ்வாசமான தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷ்டம்! வெறும் ஒரு டாலருக்கு தன் சலூன் கடையை விற்ற முதலாளி.. எங்கு தெரியுமா?

தன்னிடம் 15 ஆண்டுகளாக விஸ்வாசமாக வேலை பார்த்த பெண்ணிற்கு தன் கடையை வெறும் ஒரு டாலருக்கு சொந்தமாக கடை ஒனர் எழுதி கொடுத்த சம்பவம் கடும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் பியோ இம்பரெட்டி, 79 வயதாகும் இவர் அமெரிக்காவின் கனெக்ட்டிகட் மாகாணத்தில் கடந்த 56 ஆண்டுகளாக சலூன் கடைகளை நடத்த வருகிறார்.

இவர் பல இடங்களில் கடைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கேத்தி மெளரா என்ற இளம் பெண் இவர்களிடம் ஹேர் ஸ்டைலிஸ்டாக, பணியில் சேர்ந்துள்ளார்.

அவர் பணியில் மீது கொண்ட ஆர்வத்தில் நன்றாக வேலை செய்ய துவங்கினார். பியோவவும் மெளராவும் ஒரே குடும்பமாக பழக துவங்கினர்.

இந்நிலையில் மெளராவிற்கு 36 வயதாகும் நிலையில் அவர் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. பியோவிற்கு 79 வயதாவதால் அத்தனை பிஸ்னஸ்களையும் பார்க்க முடியவில்லை.

அதனால் பியோ தனது மெளரா பணியுரியும் கடையைஅவருக்கே விற்க முடிவு செய்தார். அதுவும் வெறும் ஒரு டாலருக்கு விற்றுள்ளார்.

தன்னிடம் விசுவாசமாக இருந்த தொழிலாளி, தன் குடும்பத்தில் ஒருவராக மாறியதால் அவருக்கு உதவும் வகையில் இதை செய்துள்ளார்.

இதனால் மெளராவிற்கு ஒரு கடை அமைப்பதற்கான அட்வான்ஸ், மற்றும் சலூனிற்கான பொருட்கள் எல்லாம் மிச்சமாகிவிட்டது. அந்த இடம் பியோவின் சொந்தஇடம் என்பதால் அவருக்கு மாதம் வாடகை மட்டும் வழங்கவுள்ளார்.

இந்த செய்தி சமூகவலைத்தளங்கிளல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தன்னிடம் விசுவாசமாக வேலை செய்தததற்காக கடை ஓனர் தன் கடையையே வேலை செய்தவருக்கு ஒரு டாலருக்கு விற்றதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related posts

பல ஆண்டுகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இளம்பெண் எடுத்த துணிச்சலான முடிவு

SudarSeithy

சீனாவில் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா.. புதியதாக 48 பேர் பாதிப்பு!

SudarSeithy

உலகிலேயே விலை உயர்ந்த பர்கர் இதுவாம்!.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

SudarSeithy