13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

மகா சங்கத்தினருடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் சட்டத்தில் உள்ள தடைகளை நீக்கி குறித்த பல்கலைக்கழகத்தை அதன் எல்லைக்குள் கொண்டுவருவதற்கான புதிய சட்டம் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

இலவசக் கல்வியை இராணுவமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்ததுடன் நாடளாவிய ரீதியில் பல போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ். பலாலி பிரதான வீதியில் வரவேற்பு பதாகை (Photos)

SudarSeithy

புலமைப்பரீசில் பரீட்சை பெறுபேறுகள்; வெட்டுப்புள்ளி வெளியிடு

SudarSeithy

வரலாற்று புகழ் மிக்க கதிர்காமம் ஆலயத்தின் தங்கத் தட்டு மாயம்!

SudarSeithy