13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

யாழ்.பருத்தித்துறையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தலைமறைவு!

யாழ்.பருத்தித்துறையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 6 பேர் தலைமறைவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

பருத்தித்துறை நகர் பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி பின்னர் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளுக்காக சுகாதார பிரிவினர் தேடி சென்றிருந்தனர்.

இந்த நிலையில் அவர்களில் 6 பேர் தலைமறைவாகியுள்ளமை தொியவந்துள்ளது. இவ்வாறு தலைமறைவானவர்கள் கல்முனை மற்றும் புத்தளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

Related posts

யாழில் கரையொதுங்கிய சடலங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதா?

SudarSeithy

கூட்டத்திலிருந்து இரண்டு அதிகாரிகளை வெளியேற்றிய கோட்டாபய

SudarSeithy

புத்தாண்டுக் கொடுப்பனவாக ரூபா 25,000!

SudarSeithy