இலங்கையில் டெல்டா கொவிட் திரிபின் பரவல் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜிஸ்ட் வைத்தியர் நதீகா ஜானகே தெரிவித்துள்ளார்.
புதிய சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் எந்த அளவிற்கு கடைப்பிடிக்கின்றனர் என்பதைப் பொறுத்து டெல்டா திரிபின் பரவலானது அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். “நாங்கள் இன்னும் இங்கிலாந்து திரிபினை அதிக மாதிரிகளில் காண்கிறோம்.
அவ்வப்போது டெல்டா திரிபினை பார்க்கிறோம். அதாவது டெல்டா திரிபினை கட்டுப்படுத்தும் நிலையில் நாங்கள் இன்னும் இருக்கிறோம். எனினும், எதிர்காலத்திலும் டெல்டா திரிபின் பரவலை கட்டுப்படுத்த முடியுமா என்பதே கேள்விக் குறியாக உள்ளது.
புதிய வழிகாட்டுதல்களை நாம் எந்த அளவிற்கு கடைப்பிடிக்கின்றோம் என்பதைப் பொறுத்தே இதனை கட்டுப்படுத்த முடியும் என்றார்.