23.5 C
Manchester
23 July 2021
Image default
வாழ்க்கை முறை

ஜொலிக்கும் அழகு தரும் விளக்கெண்ணெய்! இப்படி பயன்படுத்தினாலே போதும்

ஆமணக்கு விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் தான் விளக்கெண்ணெய்.

இது ஒரு தனித்துவமான சுவை மற்றும் வாசனை மற்றும் monounsaturated கொழுப்பு அமிலம் நிறைந்து உள்ளது.

இதில் வைட்டமின் ஈ மற்றும் தாதுப்பொருள்கள் போன்ற தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.

இது வியக்கத்தக்க அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் பல ஆரோக்கிய பலன்கள் நிறைந்துள்ளது. சருமத்திற்கு இது பலவகையில் உதவுகின்றது.

அந்தவகையில் தற்போது விளக்கெண்ணெயை எப்படி எல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

விளக்கெண்ணெய்யை தினமும் தூங்கச்செல்லும் முன் கண்களை சுற்றிலும் தடவிக்கொண்டு படுத்தால் கண்எரிச்சல் குணமாகும்.

குளிப்பதற்கு முன் விளக்கெண்ணெய்யை உடலில் தடவிக்கொண்டு குளித்தால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

விளக்கெண்ணெய்யில் உள்ள புரத மூலக்கூறு முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. முகப்பருக்களின் மீது விளக்கெண்ணெய்யை தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சருமத்தில் ஏற்டும் சிவப்பு, தடிப்பு அரிப்பு போன்ற பாதிப்புகளுக்கும் , பூஞ்சை தொற்றுக்கும் , விளக்கெண்ணெய்யை சிறிதளவு தேங்காய் விளக்கெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் தடவி வரலாம்.

2 டீஸ்பூன் விளக்கெண்ணெய்யில் சுத்த்மான பருத்தி துணியை நனைத்து முகம், கழுத்து பகுதியில் தேய்த்து இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவலாம். இது சருமத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

தேங்காய் எண்ணெய்யில் சில துளிகள் விளக்கெண்ணெய்யை சேர்த்து தினமும் தலைமுடிக்கு தடவி வருவதால் உடல் உஷ்ணம் குறையும். கூந்தல் மிருதுவாகவும, மினுமினுப்புடனும் இருக்கும்.

விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து முடியின் வேர்ப்பகுதியில் தடவி ஒரு மணிநேரம் ஊறவைத்து விட்டு குளிக்கலாம். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் தலையில் இருக்கும் பொடுகு நீங்கும். முடி உடையாமல் செழித்து வளரும்.

வாரம் ஒருமுறை விளக்கெண்ணெய்யை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கூந்தலில் ஏற்படும் வறட்சி குறையும்.

தினமும இரவு படுக்கப்போகும் முன்பு கண் இமைகளில் விளக்கெண்ணெய்யை தடவி வரலாம். இவ்வாறு செய்வதால் இமைகள் அழகு பெறும்.

பாதங்களில்ல வெடிப்பு உள்ளவர்கள் தினமும் தூங்கச்செல்வதற்கு முன் வெடிப்புகளின் விளக்கெண்ணெய்யை தடவினால் பித்த வெடிப்பு குணமாகும்.

Related posts

வறட்டு இருமலை போக்க உதவும் சில மருத்துவ குறிப்புகள்! பலருக்கும் தெரியாத தகவல்கள்

SudarSeithy

நரைமுடியால் அவதிப்படுகிறீர்களா? தேங்காய் எண்ணெய்யுடன் இதை மட்டும் சேர்த்தால் போதும்

SudarSeithy

சோளத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் !!

SudarSeithy