செய்தி

தாயாரால் வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி மீட்பு

வவுனியா, பெரியதம்பனை பகுதியில் வீட்டு அறை ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி செட்டிகுளம் பிரதேச செயலக பெண்கள், சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களால் இன்று மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், பெரியதம்பன, மருதங்குளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து 7 வயது சிறுமி ஒருவரை பல நாட்களாக தொடர்ச்சியாக தாயார் மற்றும் தாயாரின் மறுதார கணவர் ஆகியோர் அடித்து, சூடு வைத்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்றைய தினமும் குறித்த சிறுமி தாயாரால் அடித்து துன்புறுத்தப்பட்டு வீட்டு அறை ஒன்றில் தனியாக வைத்து பூட்டப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலக பெண்கள், சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு தெரிய வர அவர்கள் அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது வீட்டில் எவரும் இல்லாத நிலையில் குறித்த சிறுமியை வீட்டு அறை ஒன்றில் பூட்டி வைத்திருந்த நிலையில் மீட்டுள்ளனர்.

செட்டிகுளம் பிரதேச செயலக பெண்கள், சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள் சிறுமியின் வாக்குமூலம் மற்றும் சிறுமியின் உடலில் இருந்த துன்புறுத்தல் காயங்கள் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த சிறுமியை பறையனாலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுள்ளனர்.

சிறுமி தொடர்பில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இலங்கை – அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான உறவில் பிரச்சினை இல்லை! அமெரிக்க தூதுவர்

அம்மு

யாழ்ப்பாணத்தில் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு

அம்மு

வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் பதிவு செய்யுங்கள்!

அம்மு