15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

சீனாவின் தடுப்பூசினியால் இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்

கொவிட் தடுப்பூசிகளுக்கான இலங்கையின் மருந்து கட்டுப்பாட்டு நிபுணர்கள் ஆலோசனை அமைப்பின் எட்டு உறுப்பினர்களில் மூன்று பேர் நேற்று பதவி விலகியுள்ளனர்.

சீனாவின் தடுப்பூசியான சினோவாக்கை இலங்கையில் பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஒப்புதல் அளித்த பின்னர் இவர்கள் பதவி விலகியுள்ளனர்.

நோயெதிர்ப்பு நிபுணர் வைத்தியர் ராஜீவ டி சில்வா, வைராலஜிஸ்ட் வைத்தியர் காந்தி நாணயக்கார மற்றும் சுவாச மருத்துவர் பேராசிரியர் சன்ன ரணசிங்க ஆகியோரே பதவி விலகியுள்ளனர்.

செய்வதற்கான தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் புறக்கணிப்பு மற்றும் தடுப்பூசி ஆலோசனைக் குழுவின் விஞ்ஞான அறிவியல் ஆலோசனைகள் மீறிப்பட்டமை காரணமாகவே தாம் பதவி விலகியுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று கூறியுள்ளது.

பதவி நீக்குதல், விலகல் மற்றும் புதிய உறுப்பினர்கள் நியமித்தல் உள்ளிட்ட பிரச்சனைகளில் இந்த ஆலோசனைக் குழு தொடர்ந்தும் சிக்கியுள்ளது.

2021, ஜூன் 9 அன்று, இலங்கையில் பயன்படுத்த குறைந்தபட்சம் 2 மில்லியன் சினோவாக் குப்பிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டுமா என்று தீர்மானிக்கும் அவசர கூட்டத்தில், ஆலோசனை நிபுணர் குழு இரண்டாக பிரிவடைந்தது. அந்த கூட்டத்தில் சினோவாக் “குறைவான பயனுள்ள தடுப்பூசி” என்று அந்த கூட்டத்தில் முழு குழுவும் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் ஒரு குழு சினோவாக்கின் குறிப்பிட்ட தொகையை இறக்குமதி செய்ய நிபந்தனைகளுடன் “வரையறுக்கப்பட்ட” ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என்று கூறியது. எனினும் மற்ற குழு அதனை ஏற்கவில்லை. சினோவாக் இரண்டு அளவைப் பெற்று ஆறு மாதங்களுக்குப் பிறகு, மற்றும் ஒரு ஊக்கியும் தேவைப்படும் என்று சினோவாக் ஆவணங்கள் தெளிவாகக் கூறியுள்ளன.

Related posts

கொழும்பு வைத்தியசாலையில் தாயின் சடலத்தை தேடி கதறி அழும் மகன்

SudarSeithy

நாளை வெளிவரவுள்ள முக்கிய அறிவிப்பு!

SudarSeithy

இலங்கையில் பயணத்தடை குறித்து வெளியான அறிவிப்பு!

SudarSeithy