பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மாம்பழங்களை பரிசாக அனுப்பியுள்ளார்.
இந்த மாம்பழங்களை இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரெக் எம்.டி.அரிபுல் இஸ்லாம் பிரதமர் மகிந்தவிடம் கையளித்துள்ளார்.
பங்களாதேஷ் பிரதமரின் இந்த பரிசுக்கு , இலங்கை பிரதமர் தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
அதோடு இது இரு நாடுகளுக்கும் இடையிலான பலனளிக்கும் உறவைக் குறிக்கிறது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டதாகவும் கூறப்படுகின்றது.