13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

இளம் பெண் வைத்தியர் ஆடை மாற்றுவதை இரகசியமாக படம்பிடித்த வைத்தியர்!

இளம்பெண் வைத்தியர் ஒருவர் ஆடை மாற்றுவதை புகைப்படம் எடுத்த ஆண் வைத்தியர் தற்போது விளக்கமறியலில் உள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

காதல் மயக்கத்திலேயே அவர் இந்த மோசமான செயலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்மாந்துறையை சேர்ந்த 35 வயதான வைத்தியர் ஒருவர் அதே வைத்தியசாலையில் பணிபுரிந்த இளம்பெண் வைத்தியரின் காதலிந்து வந்துள்ளார்.

தான்காதலை சொல்லி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்ற நிலையில், கடந்த 10ஆம் திகதி இரவு ராகம வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அப்போது இரவு 8 மணியை கடந்திருந்தது.

பெண் வைத்தியர் தங்கியிருந்த விடுதிக்கு சென்றார். அவர் பணி முடித்து விடுதி திரும்பும் நேரத்தை, ஆண் வைத்தியர் அறிந்திருந்தார்.

பெண் வைத்தியர் விடுதிக்கு திரும்பி, குளிக்கச் சென்றார். தனி விடுதியென்பதால், குளித்து விட்டு வெளியில் வந்துள்ளார்.

விடுதியின் ஜன்னலோரம் மறைந்து நின்று இவற்றை பார்த்துக் கொண்டிருந்த ஆண் வைத்தியர், பெண் வைத்தியரை தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்தார்.

அப்போது அவர் புகைப்படம் எடுக்க வசதியாக சிறிது நகர்ந்த போது, தடுமாறு தட்டுப்பட்டு, சிறிய சத்தம் எழுந்தது.

அதன்பின்னரே ஜன்னல் பக்கம் பார்த்தார். ஒருவர் கையடக்க தொலைபேசியை வைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. துண்டால் உடலை மறைத்துக் கொண்டு நெருங்கிச் சென்று பார்த்தார்.

தனக்கு தெரிந்த வைத்தியர்! அறைக்குள் சென்று துணியொன்றால் உடலை மூடிக்கொண்டு வந்து, கையடக்க தொலைபேசியில் படம் எடுத்தாரா என வினவினார். ஆண் வைத்தியர் மறுத்தார். அவரிடமிருந்து கையடக்க தொலைபேசியை பறித்து பார்த்தார்.

எனினும், அந்த புகைப்படங்களை அவரால் மீட்க முடியவில்லை. பின்னர் புகைப்படம் எடுத்ததை ஒப்புக் கொண்ட ஆண் வைத்தியர், தன்னை காதலித்தால் அவற்றை அழிப்பதாக கூறி குறித்த பெண்ணை மிரட்டியுள்ளார்.

பெண் வைத்தியர் பல முறை கெஞ்சியும், அதை கணக்கெடுக்காமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். இதையடுத்து பெண் வைத்தியர் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து, ஆண் வைத்தியர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டன.

அவற்றில் பெண்களின் அந்தரங்கப்படங்கள் காணப்பட்டன. குறித்த ஆண் வைத்தியர் மீது வேறு இரண்டு பெண்களும் முறையிட்டிருந்தனர். வைத்தியர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

வடக்கு ஆளுநரின் கடும் எச்சரிக்கை! அடுத்து என்ன நடக்கும்?

SudarSeithy

தினசரி 3,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள்!

SudarSeithy

இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலக ஆசிரியர்கள் திடீர் தீர்மானம்

SudarSeithy