15.9 C
Manchester
17 September 2021
Image default
இலங்கை

யாழில் இப்படியும் மோசடி; மக்களே அவதானம்

யாழ்.மாவட்டத்தில் பழைய இரும்பு சேகரிப்பதாக கூறி வீடுகளுக்குள் நுழையும் நபர்கள் பெறுமதியான பொருட்களை திருடி செல்வதாக கூறப்படும் நிலையில், பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவம் ஒன்று யாழ்.நீர்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் நடைபெற்றிருக்கின்றது. குறித்த வீட்டிற்கு பழைய இரும்பு சேகரிக்கும் கும்பல் ஒன்று படி ரக வாகனத்தில் வந்த 4 பேர் வீட்டில் இருந்த மரத்திலான சிற்பவேலை செய்யப்பட்ட மேசையொன்றினை எடுத்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீட்டில் இடம்பெற்றுள்ளது. மேசையினை பெறுமதி கிட்டத்தட்ட 25 ஆயிரம் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றது.

மேசையை தூக்கி ஓடுவதை அவதானித்த அயலவர் அதனை தடுக்க செல்லும் போது அவரை உதைத்து விட்டு தப்பி கொள்ளையர்கள் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கொள்ளையர்கள் வந்த வாகன இலக்கம் NP PP 2707 எனவும் கூறப்படுகின்றது. இதுகுறித்து உடனடியாக பொலிஸ் அவசர தொலைபேசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related posts

மட்டக்களப்பில் பாரிய திருட்டு சம்பவம்: சி.சி.ரிவியில் சிக்கிய திருடனின் புகைப்படம்!

SudarSeithy

இலங்கையில் இருவேறு தடுப்பூசி பெற்ற மருத்துவருக்கு கொரோனா

SudarSeithy

யாழ்ப்பாணத்தில் பாரிய விபத்து

SudarSeithy