23.5 C
Manchester
23 July 2021
Image default
இந்தியா

திருப்பதி ஏழுமலையானுக்கு 4 கோடி ரூபா தங்க வாள் காணிக்கை!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், திருமலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு 4 கோடி இந்திய ரூபா மதிப்பிலான தங்க வாளை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.எஸ். பிரசாத் நேற்று காலையில் விஐபி பிரேக்தரிசன நேரத்தில் தனது மனைவியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

இதன்போது அவர், மூலவருக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட தங்க வாளை, தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் காணிக்கையாக வழங்கினார்.

6.5 கிலோ எடை கொண்ட இந்த வாள், கோயமுத்தூரில் மிகவும் கலை நயத்துடன் தயாரிக்கப்பட்டதாகவும் பிரசாத் தெரிவித்தார்.

ஏற்கெனவே ஏழுமலையானுக்கு சூரிய கட்கம் எனும் தங்கவாள் உள்ள நிலையில் தற்போது மற்றொரு வாள் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்னை ஓலையை சுற்றி வரையப்பட்ட கோடு: வைரலான புகைப்படத்தின் உண்மை பின்னணி

SudarSeithy

ATM மெஷினில் கிழிந்த நோட்டு வந்தால் என்ன செய்ய வேண்டும்? இதோ வழிமுறை

SudarSeithy

50 பவுன் நகையுடன் வந்த மணப்பெண்: மணமகன் கூறிய வார்த்தை! மறுநிமிடமே கழற்றி கொடுத்த மணப்பெண்

SudarSeithy